அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உலக இறக்குமதிப் பொருள்களுக்காகப் புதிதாகப் 10 வீத வரியை அறிவித்துள்ளார்.
அவரது வரிக் கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து இந்தப் புதிய வரியை அறிவித்துள்ளார்.
புதிய வரியை அறிவித்துள்ள டிரம்ப், தமது வரிக்கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
