ரோட் தீவின் ‘போட்டக்கட்’ பகுதியில் உள்ள பனிச் சறுக்குக் கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூடத்தில், திங்கட்கிழமை (பிப்ரவரி 16) உயர்நிலைப் பள்ளி ஹாக்கி விளையாட்டுப் போட்டி நடந்துகொண்டிருந்தபோது, அச்சம்பவம் நேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட மூவர் மாண்டனர். மேலும் படுகாயமடைந்தனர்.
சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3.30 மணி அளவில் ‘டெனிஸ் எம். லின்ச்’ கூடத்தில் நடந்த அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், மேலும் மூவர் கடுமையாகக் காயமுற்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை. இருப்பினும், அது குடும்பத் தகராறு காரணமாக எழுந்திருக்கலாம் என்று ‘போட்டக்கட்’ காவல்துறையின் தலைவர் டீனா கொன்காவ்ஸ் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் கூறினார். அது குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு சம்பவம் என்றார் அவர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்தோ மாண்டவர்களின் வயது பற்றியோ எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், மாண்ட மற்ற இருவர் பெரியவர்களாகத் தெரிவதாக அவர் சொன்னார்.
