இந்துக்களின் விசேட தினமான தைப்பொங்கல் தினத்தை ஒட்டி கண்டி பன்விலை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் நிலுசா மனோரத்ன தலைமையில் பொங்கல் விழா அண்மையில் கோலாகலமாக நடைபெற்றது.
தேசிய நல்லிணக்கத்திற்கு வலு சேர்க்கும் வகையில் சகல இன மக்களின் பங்கேற்புடன் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வின் போது கோலப் போட்டிகளும் பன்விலை விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்விக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அரச நிறுவனக்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். கெலா போக்க தியனில்ல ஆலய பிரதம குரு கிரியைகளை நிகழ்த்தி வைத்தார்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்



