இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் 10ஆவது ஐ.சி.சி. டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் இன்று ஆரம்பமாகியது.
இதில் இன்று நடைபெற்ற 3ஆவது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய, அமெரிக்க அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற அமெரிக்க அணியின் கெப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதற்கமைய இந்திய அணி முதலில் துடுப்பொடுத்தாடியது.
தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா , இஷான் கிஷான் களமிறங்கினர். அபிஷேக் சர்மா ஓட்டங்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் அமெரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சால் இஷான் கிஷன் 20 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் எடுத்து ட்டமிழந்தனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 09 விக்கெட்டுகளை இழந்து 161 ஒட்டங்களைப் பெற்று அமெரிக்க அணிக்கு 162 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அமெரிக்க அணி 20 ஓவர் நிறைவில், 07 விக்கெட்டுகளை இழந்து 132 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது
