நுகேகொடையில் வழக்கொன்றில் ஆஜராகிவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த சட்டத்தரணயின் கவாகனத்தை வழிமறித்துத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் பெண்கள் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு சட்டத்தரணிகள் இருவர் காரில் வந்துகொண்டிருந்தபோது கங்சபா சந்தியில் வாகனத்தை மறித்துக் கொலை மிரட்டல் விடுத்துத் தாக்கியதாக மிரிஹான பொலிஸ் குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலில் வாகனத்திற்குச் சேதம் ஏற்பட்டதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் 35 வயது, 55 லயது பெண்கள் இருவரை மிரிஹான பொலிஸார் நேற்று (02) கைதுசெய்துள்ளனர்.
விசாரணையின் பின்னர் அவர்கள் இன்று நுகேகொடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
