கண்டி பன்விலை நெல்லிமலை பிரதேசத்திலுள்ள பாலம் கடும் மழையினால் இரண்டாவது முறையும் வெள்ளத்தினால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26.11.2025 ஆம் திகதியன்று கடும் மழை மற்றும் காற்று மண்ரிவினால் நெல்லிமலை பிரதேசத்தில் அமைந்திருந்த பாலம் முற்றாக சேதமடைந்தது.
பின்னர் தோட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே பாதை ஒன்றை அமைத்துள்ளனர்.
17.12.2025 நேற்றைய தினம் முதல் இப்பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட தற்காலிகமாக பாலமும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நெல்லிமலை அரச பெருந்தோட்டம்,சோழங்கந்தை தோட்டம் போன்ற பகுதிகளுக்கான பாதை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.இதனால் இவ்வீதியைப் பயன்படுத்தும் அனைத்து மாணவர்களும் பாடசாலைக்குச் செல்லவில்லை மேலும் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் நெல்லிமலை தனியார் தோட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் பாடசாலையை புறங்கணித்ததால் பாடசாலையின் கல்வி நடவடிக்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பாலம் இரண்டாவது தடவையும் உடைப்பெடுத்ததால் நெல்லிமலை மக்கள் செய்வதறியாது திக்குமுக்காடுகின்றனர்.இப்பாலத்தை அமைகக சம்பந்தப்பட்ட சகலரும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பொதே மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்





