வனராஜாவில் முச்சக்கர வண்டி மின் கம்பத்தில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஹட்டன்-மஸ்கெலியா பிரதான சாலையில் வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (நவம்பர் 06) மதியம் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் காயமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கனமழை காரணமாக வழுக்கும் சாலையில் சென்ற முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
மஸ்கெலியா விசேட நிருபர்.
