ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதால், 1 ,500 கப் பல்கள் மற்றும் 20,000 பணியாளர்கள் நடுக்கடலில் சிக்கி தவிப்பதாக சர்வதேச கடல்சார் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தொடர்ந்த போ ரால், ஹார்முஸ் ஜலசந்தியை மேற்காசிய நாடான ஈரான் முடக்கியுள்ளது.
இதையடுத்து, உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டதுடன், அதன் விலைகளும் உயர்ந்தன. இதனால், சர்வதேச நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், பனாமாவில் சமீபத்தில் நடந்த அமெரிக்க நாடுகளின் கடல்சார் மாநாட்டில் பங்கேற்ற சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச் செயலர் ஆர்சனியோ டொமிங்குவேஸ் பேசியுள்ளதாவது: ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால், 1 ,500 கப்பல்கள் மற்றும் 20,000 மாலுமிகள் நடுக்கடலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதுவரை 30க்கும் மேற்பட்ட தாக்குதல்களில், 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட இந்த மாலுமிகள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்கள் ஆவர். சர்வ தேச மோதல்களின் விளைவுகளால் அவர்கள் பாதிக்கப்பட கூடாது.
இவர்கள் சர்வதேச வர்த்தகத்திற்கு ஆதரவாக தங்கள் வேலைகளை செய்யும் சாதாரண மனிதர்கள். ஆனால், அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளில் அவர்கள் சிக்கியுள்ளனர்.
