ஹற்றன் இபோச ஊழியர்கள் மீது தனியார் பஸ் ஊழியர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்ந்து வருகிறது.
ஹற்றன் இலங்கை போக்குவரத்துச் சபை (லங்கமை) டிப்போவினால் வெலிஓயா வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்ஸின் நடத்துநர் மீது, தனியார் பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில், காயமடைந்த நடத்துநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் டிப்போ முகாமையாளர் பி. டபிள்யூ. எம். பாலித பண்டார தெரிவிக்கையில், கடந்த 15ஆம் திகதி வெலியோயா நோக்கி பயணித்த பஸ்ஸின் நடத்துநர், ஹட்டன் மல்லியப்பூ பகுதியில் தனியார் பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும் தாக்கியதாகத் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. தாக்குதலுக்குள்ளான நடத்துநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பின்னரும் (16) ‘சிடிபீ’ ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற அச்சுறுத்தல்கள் தமது டிப்போவுக்குச் சொந்தமான மேலும் வேறு பேருந்துகளுக்கும் விடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பாலித பண்டார, தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் ‘லங்கம’ டிப்போவின் பேருந்துகளை வழித்தடங்களில் இயக்குவது சிரமமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனியார் பஸ் ஊழியர்களுக்கு இபோச ஊழியர்கள் மீது ஏன்தான் இந்த வன்மம்?
கௌசல்யா
