கொட்டகலை கிறிஸ்லர்ஸ் பாம் பாதை அபிவிருத்தி ஆரம்பம்!
கொட்டகலை கிறிஸ்லர்ஸ் பாம் பாதை அபிவிருத்தி இன்று (18) அடிக்கல் நாட்டி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் உறுப்பினர் சுப்பையா மகேந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க,சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்த வேலைத்திட்ட முன்மொழிவினூடாக மாகாண சபை நிதியத்தில் ரூ. 15 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இன்றைய பாதை அபிவிருத்தி ஆரம்ப நிகழ்ச்சியில் கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த்,உறுப்பினர் சுப்பையா மகேந்திரன், தோட்டப்பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
மலைக்குருவி
