பங்கெட்டி முதல் ஹப்புத்தளை, விகாரகலை பகுதியில் தொடர்ந்து பனி மூட்டம் நிலவுகிறது.
கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மாலை வேளையில் கடுமையான பனி மூட்டத்துடன் சாரல் மழையும் பெய்து வருவதால் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறு ஹப்புத்தளை போக்குவரத்து பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாகனங்களில் முகப்பு விளக்கை ஒளிரச் செய்து வாகனங்களை ஓட்டிச் செல்லுமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்



