நுவரெலியா இறம்பொடை வெதமுல்லை தோட்டத்தில் தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த தொழிலாளி மீது விசப்பாம்பு தீண்டியுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 10:30 அளவில் நிகழ்ந்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
தேயிலைச் செடியினைத் துப்புரவு செய்து கொண்டிருந்தபோது தேயிலைச் செடியின் அடியில் இருந்த விரியன் பாம்பு தீண்டியதாகத் தெரிய வருகிறது.
அந்த நபர் தொடர்ந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கௌசல்யா

