வட்டவளை – லொனக் மீனாட்சி தோட்டத்தைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவி அ. விஜயகுமாரி பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று சட்டத்தரணியாக பட்டம் பெற்றுள்ளார்.
அவரைகக் கெளரவிக்கும் நிகழ்வு நேற்று ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் அம்பகமுவ பிரதேச கிளையின் இளைஞரணி தலைவர் பிரதாப் சிங், பிரதேச கிளையின் உப தலைவர் ரமேஷ் குமார் ஆகியோரின் ஏற்பாட்டில் வட்டவளை மீனாட்சி தோட்டத்தில் நடைபெற்றது.
அப்போது ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.. ஜீவன் இராஜேந்திரன் அவர்களால் சட்டத்தரணி செல்வி விஜயகுமாரி பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அம்பகமுவ பிரதேச சபை தவிசாளர் கப்பில நாகந்தல, அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் இரா. ஜீவன் இராஜேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க நீண்ட நாள்களாக புனரமைக்கப்படாத லொனக் தோட்ட பாதை மற்றும் சிறுவர் முன் பள்ளி நிலையங்களில் நிலவும் குறைபாடுகளை ஆராயும் பொருட்டு அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கபில நாகந்தல கள விஜயத்தை மேற்கொண்டார் .
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் வட்டவளை பிராந்திய கிளையின் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தோட்ட பொதுமக்களினால் மீனாட்சி தோட்ட ஆலய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் ராஜேந்திரன். லோனக் பாடசாலையின் அதிபர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்
நிகழ்வில் கருத்து தெரிவித்த தவிசாளர்:
இங்கு நிலவும் பிரச்சனைகள் பிரதானமானதாக பாதை அபிவிருத்தி காணப்படுகிறது என்பதை களவிஜயத்தின் மூலமாக இனம் கண்டதாகவும, இந்தப் பாதையைத் தற்காலிகப் பாவனைக்கு உகந்த வகையில் சீர் செய்ய உடன் நடவடிக்கை எடுப்பதாகவும் சிறுவர் முன்பள்ளி நிறுவனங்களில் நிலவும் குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதாகவும் கூறினார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், முன்மாதிரியாகத் திகழும் விஜயகுமாரி போல் ஏனையோர் கல்வியில் கவனம் செலுத்தி மிகச்சிறந்த கல்விமான்களாக உயர முயற்சிகாகவேண்டும் எனவும் மிகப் பின்தங்கிய பிரதேசமான லொனக் தோட்டத்திலிருந்து மிகவும் சிரமத்திற்கு மத்தியிலும் கல்விகற்று சட்டத்தரணியாக பட்டம் பெற்றுள்ள செல்வி விஜயகுமாரிக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.
.
மேலும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி கல்விப் பிரிவின் ஏற்பாட்டில் மீனாட்சி லொனக் தோட்ட முன்பள்ளி சிறுவர் சிறுமிகளுக்கு அப்பியாச புத்தகங்களும் , நிறப் பூச்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டன.
மூன்று பிரதேசங்களில் இயங்கும் வாசிகசாலைக்குத் தலா ஒன்று வீதம் மூன்று மடிக்கணினிகள் வழங்கப்பட்டதும் பாராட்டத்தக்க விடயமாகும்.
நிகழ்வில் பிரதேச மக்கள் தோட்டத் தலைமை அதிகாரி ஏனைய முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
வட்டவளை கேதீஸ்



