மஸ்கெலியா பொது விளையாட்டு மைதானம் அபிவிருத்திப பணிகள் இன்று ஆரம்பkhdJ.
இன்று காலை 10 30 இற்கு மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தலைமையில் அபிருத்திப் பணிகள் ஆரம்பமாகின..
நிகழ்வில் கனேடிய உள்ளூராட்சி மன்ற சம்மேளனத்தின் சிரேஸ்ட திட்ட முகாமையாளர் பி. பிரதீப், திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தனி ராமநாயக்க, மதிப்பீட்டு உத்தியோகத்தர் கோவிந்தராஜ் டில்ஷான் நிகழ்ச்சி திட்ட அமைப்பாளர் லசிந்து பண்டார ஆகிய நால்வருடன் மஸ்கெலியா பிரதேச சபையின் உதவி தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அதன் செயலாளர் எஸ்.ராஜவீரன் உட்பட தற்போதைய பிரதேச சபையின் உறுப்பினர்கள் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. புஷ்பகுமார மஸ்கெலியா பொது வைத்திய அதிகாரி எம். எச். ஈர்ஷாட், முன்னாள் வைத்தியர் கணேசலிங்கம் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், நகர வர்த்தகர்கள், கலந்து கொண்டனர்.
இந்த புனரமைப்பு பணிகளுக்காக கனேடிய உள்ளூராட்சி மன்றம் 1 கோடி 400000 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதி வழங்கி இப் பணிகள் இன்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்


