மஸ்கெலியா கிலண்டில் நடுத் தோட்ட பிரிவில் இன்று (30) மாலை மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் போதகர் ஒருவர் உயிரிழந்ததாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமார தெரிவித்தார்.
கிறிஸ்தவ தேவாலயத்தை மேலும் விஸ்தரிக்க தளம் வெட்டி எடுத்துக்கொண்டு இருந்த வேளையில் பாரிய மண் திட்டுகள் சரிந்துள்ளன.அதில் சிக்குண்டு ஆபத்தான நிலையில், மஸ்கெலியா வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி போதகர் உயிரிழந்தார்.
இவ்வாறு மரணித்தவர் பெரிய நடுத்தோட்ட கிறிஸ்தவ மத போதகரான ராஜேந்திரன் கோபிநாத் (வயது 41) எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்


