கண்டி மடுல்கலை ஹாத்தலை மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சண்முகம் ஆராய் தம்பதியின் புதல்வி டிஷானி (𝗕𝗙𝗔 𝗛𝗼𝗻𝘀 𝗶𝗻 𝗕𝗮𝗮𝘁𝗵𝗮𝗻𝗮𝘁𝘆𝗮𝗺) யாழ். பல்கலைக்கழகத்தின் 41 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில், நடனத்துறையில் சிறப்பு நுண்கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
இவர் தனது ஊரிலும் , குடும்பத்திலும் முதல் பட்டதாரி ஆவார். தனது ஆரம்பக் கல்வியைப் பரமேஸ்வரா தமிழ் வித்தியாலயத்திலும் உயர்கல்வியை ரிஷிகலா அழகியற் கல்லூரியிலும் கற்று, தனது சமூகத்துக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
