இரத்தினபுரி, நிவித்திகலை வலயத்தில் அமைந்துள்ள டாலை தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் இன்று (08) பாராட்டு விழா நடைபெற்றது.
பாடசாலை அதிபர் செல்லையா குமாரசூரியர் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில், இவ்வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


நிவித்திகலை வலய கல்விப்பணிப்பாளர் திருமதி டி.டி.ஆர். ரூபசிங்க பிரதம அதிதி யாக கலந்து கொண்ட அந்நிகழ்வில், வலய ஆரம்ப கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.எஸ். எம் .சமரகோன், ஓய்வு நிலை அதிபர் ஆர். நடராஜா,வலயத்தின் ஆசிரிய ஆலோசகர் ஆர். கர்ணன் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், பிரதேச வங்கிகளின் முகாமையாளர்கள், பெருந்திரளான பெற்றோர்
உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களையும் பாராட்டி சான்றிதழும் கேடயமும் வழங்கி கொளரவித்தனர்.
இரத்தினபுரி எஸ்.ஆர்.இரவீந்திரன்
