பேராதனை ரயில்வே பால புனர்நிர்மாணப் பணிகள் தாமதமாகுவதாக ரயில் நிலைய அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தித்வா புயலுக்குச் சரிந்த இந்தப் பாலத்தை ஏப்ரல் 28 இற்குள் மீளமைப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கிறது.
எனினும். போகிற போக்கைப் பார்த்தால் பாலம் நிர்மாணித்து முடிக்கப்படாது என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்தின தெரிவித்துள்ளார்.
இந்தப் பாலம் மீண்டும் சாயத் தொடங்கியிருப்பதால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் திரு. சோமரத்தின மேலும் தெரிவித்துள்ளார்.
வி. அருள்செல்வன்
