பிரதி அமைச்சர் பிரதீப் தலையீட்டையடுத்து நடவடிக்கை
பலாங்கொடை உடகந்தை விநாயகர் சிலை சிதைப்பு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலாங்கொடை, உடகந்தைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீர விநாயகர் ஆலயத்தின் விநாயகர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (24.09.2026) இரவு உடனடியாக பலாங்கொடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஆகியோரைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விசாரித்தார்.
இதனையடுத்து, பிரதி அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் துரிதப்படுத்தியதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
