கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு தோட்டப் பகுதிகளிலும் நகர்ப் பகுதிகளிலும் அமைந்துள்ள ஆலயங்களில், ஒரே இரவில் பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மடுல்கலை உன்னகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், டீமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், உளுகங்கை ஸ்ரீ விநாயகர் ஆலயம், உளுகங்கை கம்பளிக்கடை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், தவலந்தன்னை கந்தகட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், ஆகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் இந்தத் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
திருவுருவச் சிலைகளில் அணியப்பட்டிருந்த தங்க நகைகள், உண்டியல்கள், ஆலயத்தின் பல்வேறு பொருள்கள் பலவற்றை, திருடர்கள் மிகவும் சூட்சுமமாகத் திட்டமிட்டு ஒரே இரவில் பல ஆலயங்களில் இருந்து திருடிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவங்கள் 6 ஆம் திகதி ஞாயிறு இரவில் நடந்தேறியுள்ளன.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
