அம்பிட்டி சுமணரத்தின தேரருக்கு விளக்க மறியல் விதிக்கப்பட்டுள்ளது.
அம்பிட்டி சுமண ரத்தின தேரர் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்புவில் உள்ள புவிச்சரிதவியல் அளவை,சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை நாளை வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
