பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி அதிகார சபையின் எதிர்காலத் திட்டங்கள், பனை சார்ந்த உற்பத்திகள் தொடர்பாகவும் அதன் அபிவிருத்தி குறித்தும் விசேட கலந்துரையாடல் இன்றைய (23.06.2026) தினம் பெருந்தோட்ட ,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்தின, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் கடற்றொழில் நீரியல் வளங்கள், கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்,அரச அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பனை அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் உள்ளிட்ட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.




