எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் Andreas Motzfeldt Kravik ஆகியோருக்கிடையேயான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அப்போது இலங்கைக்கும் நோர்வேக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு மூலோபாயத் திட்டத்தை திரு. பிரேமதாச முன்வைத்தார்.