கண்டி பன்விலை நிகத்தென்னை பிரதேசத்தில் இன்று (19) மாலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பன்விலை நகரிலிருந்து வத்துகாமம் பிரதேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டியுடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் பஸ் வண்டி சேதமடைந்துள்ளது. பன்விலை பிரதேசத்திலிருந்து வத்துகாமம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மகிழுந்து ஒன்று உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயன்ற வேளையில், அதே வழியாக சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டியில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது உழவு இயந்திரத்திற்கும் பஸ் வண்டிக்கும் சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்விலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
