அண்மையில் அனர்த்தத்தை ஏற்படுத்திய தித்துவா புயலின் பின் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கான சேவைகள் பாரபட்சம் இடம்பெறுவாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தேர்தல்,ஜனநாயகத்துக்கான செயலூக்கப்படுத்தப்பட்ட பிரஜைகள் செயல் திட்டத்தின் தொடர்பாடலுக்கான பயிற்சி மையம் ( CCT) ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் மாநாடு இன்று (2026-04-24) ஹட்டன் லா அடம்ஸ் விருந்தக மண்டபத்தில் நடைபெற்றது. இதில், வளப்பகிர்வில் சமத்துவம் பேணப்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
மலையக பெருந்தோட்ட பெண்கள் எதிர்நோக்கும் சவால்களும் கலந்துரையாடப்பட்டது.
இந்த மாநாட்டில் திறந்த பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் பேராசிரியர் சந்திரபோஸ்,மனித உரிமைகள் நிலையத்தின் அட்டன் பிராந்திய முகாமையாளரும் சமூக சிற்பி நிறுவனத்தின் தலைவருமான ஜெயராஜ், SWM நிறுவனத்தின் தலைவர் திருமதி சந்திரமதி, சுய சக்தி நிறுவன இணைப்பாளர் செல்வராஜ், அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இளைஞர்,யுவதிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. நிருபர்

