சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு திருத்தச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் திருத்தங்களுடன் இன்று (09) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது .
இதையும் படியுங்கள்: மத்திய அதிவேக நெடுஞ்சாலை கண்ணொருவை வரை
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை திருத்தச் சட்டமூலம், நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் திருத்தச் சட்டமூலம், பயங்கரவாத நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச் சட்டமூலம் மீதான இன்றைய விவாதத்தை தொடர்ந்து வாக்களிப்பு நடத்தப்பட்டது .
வாக்கெடுப்பில் ஆளுந்தரப்பில் 154 பேர் ஆதரவாக வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எம்.பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவரும் எதிராக வாக்களித்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருக்கவில்லை. ஆதலால் அந்தச சட்டமூலம் மூன்றில் இரண்டுக்கும் அதிமான பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
