2026ஆ ம் ஆண்டுக்கான தேசிய ரீதியில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான ‘SCHOOL BOY & GIRL’ குத்துச் சண்டைப் போட்டியில் நுவரெலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் பங்குப்பற்றி ஒருவர் வெண்கல பதக்கத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
School boy (35- 37kg ) எடைப் பிரிவில் மாணவன் M.ஜோசுவா இப்பதக்கத்தினை வென்றுள்ளார். இப்போட்டியானது இம்மாதம் 25ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி (25-30/01/2026) வரை ஹொரண மாநகர சபை மைதானத்தில் இடம் பெற்றது.
பதக்கத்தினை பெற்ற மாணவருக்கும், பயிற்சியளித்த ஆசிரியர் வீ.அருளழகன்(couch) அவர்களுக்கும்,மேலதிக பயிற்சிகள், ஆலோசனைகள் வழங்கும் நுவரெலியா கல்வி வலயத்தின் உடற்கல்விக்கு பொறுப்பான உதவிக் கல்வி பணிப்பாளர் சுசந்த வீரசேன அவர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.


