கிங்கோரா தோட்டத்தில் இறந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.
சாமிமலை ஓல்டன் கிங்கோரா தோட்டத்தில் இன்று (12) மதியம் இறந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
பணி செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் தோட்ட’தொரை’க்குத் தகவல் கொடுத்துள்ளனர். தொரை பொலிஸாருக்குச் சொல்லிச் சிறுத்தையை மீட்க நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
இந்தச் சிறுத்தை சுமார் 5 அடி நீளமும் 18 அங்குலம் உயரமும் கொண்டது என்று நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுத்தையின் உடல் ரந்தெனிகலை மிருக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
மஸ்கெலியா நிருபர்
