ஈரானிய போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பில் நீர்மூழ்கியால் தாக்கப்பட்டதாக வெளியான செய்தியை இலங்கை கடற்படை மறுத்துள்ளது.
கப்பல் தாக்கப்பட்டதா, விபத்துக்குள்ளானதா? என்பதைக் கண்டறிய முழுமையான விசாரணைகள் நடைபெறுவதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமடோர் சி. டி. ஆர் . சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கப்பல் விபத்துக்குள்ளானதாக ஈரான் கடற்படை தகவல் வழங்கியதும் அந்த இடத்திற்குச் சென்றபோது கப்பல் பெரும்பாலும் மூழ்கியிருந்தது. 32 பேர் மீட்கப்பட்டனர்.உடனடியாக் கணக்கிட முடியாத சடலங்களும் மீட்கப்பட்டன.
எனவே, கப்பல் ததாக்கப்ப்ட்டதா, இல்லையா என்பதை தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் சொன்னார்
