ஹல்துமுல்லையில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹல்துமுல்லை,மக்கள்தெனியா பகுதியில் காட்டு யானைத் தாக்குதலுக்கு இலக்காகிக் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
கொஸ்லாந்தையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான மூக்கன் அரங்கசாமி (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
இவர் மக்கள்தெனியா பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். வழமைபோல் நேற்று (14) காவல் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கௌசல்யா
