திருட வந்து கடைக்காரருக்கு வயிற்றில் பால் வார்த்த திருடன் பற்றி நுவரெலியா நகரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது!
நுவரெலியா பேருந்து நிலையத்தில் தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருட முயன்ற நபரின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
திருட்டு நோக்கத்துடன் வந்ததாக சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத நபரின் செயற்பாடுகள் ‘CCTV கமரா’வில் பதிவாகியுள்ளன.
நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் மேல் மாடியில் அமைந்துள்ள பிரபலமான தொலைபேசி விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து, அங்கிருந்த பொருள்களைத் திருட நேற்றிரவு (14) சுமார் 10.45 அளவில் இவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளது.
அதனால்,சோகத்துடன் அவர் வெளியேறி, கடைக்காரரின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார்.
அந்த நபர் விற்பனை நிலையத்தின் கதவிலிருந்த பூட்டைத் திறக்க சில நிமிடங்களாக முயற்சிக்கும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த CCTV கமரா அமைப்பில் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நுவரெலியா ஆர்.எப்.எம்.சுஹைல்
