வத்தேகமை கல்வி வலயத்தின் வலய மட்டத்திலான தமிழ் மொழித்தினப் போட்டிகள் இன்று (23) தமிழ்ப் பிரிவுக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி பாரூக் உடையார் தலைமையில் மடவலை மதீனா தேசியப் பாடசாலையில் நடைபெற்றது.
இப்போட்டி நிகழ்ச்சிகளில் வத்தேகமை கல்வி வலயத்தைச் சார்ந்த 29 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளும் மேடையற்றப்பட்டதோடு இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் உதவிக் கல்விப்பணிப்பாளர், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர்கள், வத்தேகமை கல்வி வலயத்தின் பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் , வளவாளர்கள், பெற்றோர்களும் வருகை தந்திருந்தனர்.
வெற்றிபெற்ற பாடசாலை மாணவர்கள் மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டதோடு வலய மட்டத்தில் வெற்றிபெற்றவர்களுக்கான கௌரவமும் அளிக்கப்பட்டது.



