பேரனர்த்தத்தின் போது பாரிய நில வெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி வத்தேகமை கபரகல வீதி பின்னர் போக்குவரத்திற்காக (17) திறக்கப்பட்டிருந்த போதும் கடும் மழை நேற்று முதல் (18) கொட்டித் தீர்ப்பதால் மீண்டும் போக்குவரத்திற்காக மூடப்பட்டள்ளது. கெவும் போக் எனப்படும் பிரதேசத்திலுள்ள வீதி மீண்டும் தாழிரங்கும் அபாயம் காரணமாகவே வீதி மீண்டும் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வத்தேகம -கபரகலை மற்றும் வத்தேகம ஊடாக – கோமரை,பம்பரல்லை,பெத்தேகமை போன்ற பிரதேசங்களுக்கான போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மாற்று வழிப்பாதைகளை இப்போக்குவரத்திற்காக பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளை அறிவுறுத்துகிறது.
மலையகத்தின் பன்விலை கபரகலை மாத்தளை மடவலை கோமரை மடுல்கலை போன்ற பிரதேசங்களில் அதிக மழை பெய்து வருகிறது இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பல இடங்களிர் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பன்விலை ம. நவநீதன்



