மாத்தளை பாக்கியம் தேசிய பாடசாலையில் கற்ற புவனேந்திரன் பிரியங்கா கொழும்பு பல்கலைக் கழகத்தில் பயின்று சட்டத்தரணியாகப் பட்டம் பெற்றுள்ளார்.
உயர்தரத்தில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற பிரியங்கா, தேசிய மட்டத்தில் ஏழாமிடம் பெற்றார்.அதேநேரம், தமிழ் மொழியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றார்.
வாணிப சட்டத்தில் முதுகலை சிறப்பு பட்டம் – LLM, (Masters in commercial law with Merit பெற்று சட்டத்தரணியாக மிளிரும் பிரியங்கா, திறந்த பல்கலைக் கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றுகிறார்.


