மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் இன்று 01 ஆம் திகதி மாலை 4 மணியளவில் மூதாட்டி ஒருவரின் மீட்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தில் உடல் மிதந்து வருவதைக் கண்ட மக்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்றுள்ளனர். மிதந்து வந்தவர் காட்டு மஸ்கெலியாவைச் சேர்ந்த சுப்பிரமணியம் லெட்சுமி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹட்டன் நீதி மன்ற நீதிவான் வந்து பார்த்த பின்னர் உடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக கிளங்கன் டிக்கோயா ஆதார வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
