பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ளன.
விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சைச் சுட்டெண்ணைப் பயன்படுத்தி பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk, results.exams.gov.lk ஆகியவற்றின் மூலம் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
இம்முறை பரீட்சைக்காக மொத்தம் 200,235 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 199,598 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாகவும், 637 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களாகவும் இருந்தனர்.
நாடளாவிய ரீதியில் 1,669 பரீட்சை மையங்களில், 325 இணைப்பு மையங்களின் மேற்பார்வையில் நடைபெற்ற இப்பரீட்சைக்கு 147,407 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் தங்களது பரீட்சைச் சுட்டெண்ணை பயன்படுத்தி பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகியவற்றின் மூலம் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
மேலும், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெறுபேறு ஆவணங்களை பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களும் onlineexams.gov.lk/eic இணையத்தளத்தின் ‘Personal Account Login’ பகுதியின் ஊடாக பரீட்சைச் சுட்டெண்
அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தி பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் வாசிக்க: ஜனாதிபதி தங்கக் கணிண்ண கரப்பந்தாட்ட தொடர்
பாடசாலை அதிபர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி ‘School Account Login’ பகுதியில் உள்நுழைந்து,
தங்களது பாடசாலையின் முழுமையான பெறுபேறு ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து அச்சுப் பிரதியையும் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோல், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் தத்தமது வலயங்களுக்கான பெறுபேறு ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான உள்நுழைவு விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளியாகியுள்ள பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மேலதிக தகவல்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் பாடசாலைப் பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் பிரிவை 1911 என்ற துரித அழைப்பு இலக்கம்
அல்லது 011 2784208, 011 2784537, 011 2785922 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்புகொள்ளலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
