நாட்டின் முன்னாள் முதல் பெண் மணியான பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்கவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி) விசாரணக்காக அழைத்தமைக்கு சிவில் சமூக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோரைக் கொண்ட சிவில் அமைப்பு நேற்று (24) அறிக்கையொன்றை வெளியிட்டுத் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அதில், பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்கவின் கணவரான முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணி ரணில் விக்கிரமசிங்க மீது முன்னெடுக்கப்படும் ஒரு விசாரணைக்காக பேராசிரியை அழைக்கப்பட்டுள்ளார். களனிப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியையான அவர், கல்வித்துறைக்கு ஆற்றும் பங்களிப்புகளுக்காக இலண்டன் பல்கலைக் கழகத்தில் அவருக்குக் கௌரவ பட்டம் வழங்கப்பட்டது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அந்தப் பட்டமளிப்பு விழாவுக்குச் செல்வதற்காக அரச நிதியைப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் திரு. விக்கிரமசிங்க மீது விசாரணை நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
