Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • உள்ளூர் செய்திகள்
  • புசல்லாவை, இரட்டைப்பாதை, சங்குவாரி பகுதிகளில் மண் சரிவு: மக்கள் நிர்க்கதி

புசல்லாவை, இரட்டைப்பாதை, சங்குவாரி பகுதிகளில் மண் சரிவு: மக்கள் நிர்க்கதி

Malaikuruvi November 28, 2025
புசல்லாவை, இரட்டைப்பாதை, சங்குவாரி பகுதிகளில் மண் சரிவு: மக்கள் நிர்க்கதி

தொடரும் சீரற்ற காலநிலையின் தாக்கம் காரணமாக மலையகப் பிரதேசங்களில் பாதிப்புகள் அதிகமாகியிருக்கின்ற அதே நேரம் உயிர்ப் பலிகளும் சொத்து சேதங்களும் ஏற்பட்ட வண்ணமுள்ளன.

தொலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் மீட்புப் பணிகள் அதிகம் தாமதமாவதோடு உறவுகளிடம் தொடர்பில்லாமல் மக்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கண்டி பன்விலை உலுகங்கை பிரதேசத்தில் நேற்றிரவு 27 மண் மேடு வீடொன்றில் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலியானதோடு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புசல்லாவை பகுதியில் இரட்டைப்பாதை சங்குவாரி மேற்பிரிவில் வீடொன்றின் மீது கற்பாறை வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளனர்

இவர்கள் பாறைக்குள் அகப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும் இரட்டைப்பாதை நகருக்கு அருகாமையிலுள்ள பிரதான வீதி பள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 27 கண்டி மாத்தளை மடவலை வத்தேகம போன்ற இடங்களுக்குச் சென்ற பொதுமக்கள் பலரும் வீதிகளின் பல இடங்களிலும் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளமையாலும் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையாலும் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வத்தேகம பேருந்து நிலையத்திலேயே இரவுப் பொழுதை கழிக்க வேண்டிய நிலையை எதிர்கொண்டுள்ளனர்

மேலும் பலர் பல கிலோமீற்றர் கால் நடையாக நடந்தும் சென்றனர்.
கண்டியில் இருந்து ஹந்தானை வழியாக கலஹா செல்லும் பாதை ஐந்தாம் கட்டை பகுதியில் முழுமையாக தாழ் இறங்கியுள்ளது.

கபரகல,மடுல்கலை,பம்பரல்லை,கோமரை,பெத்தேகமை,நக்கில்ஸ் போன்ற பகுதிகளிலுள்ள தோட்டப்புறங்களின் பல வீதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதோடு போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

மக்கள் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக பெரும் பீதியடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.
……………

Post navigation

Previous: கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது
Next: மழையுடனான காலநிலை நாளை முதல் குறையும்

Related Stories

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026
மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

மஸ்கெலியா எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் வாகனங்கள்

Malaikuruvi March 1, 2026
மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

மலைநாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகளுக்கு விஷமிகள் தீவைப்பது தொடர்கிறது

Malaikuruvi March 1, 2026

Trending News

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 1

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 2

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 3

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 4

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 5

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |