பன்விலை,நெல்லிமலை சிவனேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களின் சிறுவர் சந்தை இன்று (13) நடைபெற்றது.
அதில், மாணவர்கள் பொருள்கள் மலிவான விலைக்கு விற்பனை செய்யப்பட்டன. விற்பனையின்போது மாணவர்களின் நாணயமான செயற்பாடுகளும் சிந்தையைக் கவரும்படி இருந்தது.
பொருள்களின் விலையேற்றம் அதிகரித்து வரும் இக்காலகட்டத்தில், உள்ளூர் உற்பத்திப் பொருள்களை ஊக்குவிப்பதற்கும், நோயற்ற போஷாக்கான உணவுப் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் மேம்படுத்துவதற்கு வழிவகுத்தது.


அதேநேரம், மாணவர்களின் தொடர்பாடல், வணிக அறிவு,கணிதத் திறன்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்தச் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாடசாலை அதிபர் மருதமுத்து நவநீதன் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்தப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் மலிவு விலையில் விற்பனை. செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தனர்.
அவர்களின் ஆதரவால் சிறுவர் சந்தை மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதையும் படிக்கலாம் : பாக்கியம் தேசிய கல்லூரி மாணவிககள் தேசிய போட்டிக்கு
