நேபாளத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் 200 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதில் பிரிட்டிஷ் பிரஜையான 24 வயது நபரும் அடங்குவார்.
தலைநகர் காத்மண்டுவுக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் திரிசூலி ஆற்றங்கரைப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தின்போது சாரதி உட்பட 44 பேர் பயணித்துள்ளனர். திங்கள் காலை இடம்பெற்ற இந்த விபத்தில் தமது நாட்டுப் பிரஜை ஒருவரும் உயிரிழந்ததாக நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. எனினும், நேபாள பொலிஸார் அதனை உறுதி செய்யவில்லை.
காயமடைந்தவர்கள் நேபாளம், சீனா, நியுசிலாந்து நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
வி.அருள்செல்வன்
