Skip to content
March 2, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
MALAIKURUVI

MALAIKURUVI

THE REAL STORY OF SRI LANKAN HILL STATION-MALAIKURUVI

Malai 930X110

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram
Primary Menu
  • HOME
  • செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • விசேட செய்தி
    • பிரதான செய்திகள்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • நம்மவூர் சமாச்சாரம்
  • ஆமா இது இப்படித்தாங்க
  • மேலும்
    • பொழுதுபோக்கு
    • ஆன்மிகம்
    • கட்டுரைகள்
    • கலை, இலக்கியம்
    • சந்திக்கடை சிவராமு
    • சினிமா
    • Blog
    • Sports
    • Uncategorized
    • நேர்காணல்
    • மண்ணின் மைந்தர்கள்
    • விளம்பரம்
Live
  • Home
  • இலங்கை
  • சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள்

சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள்

Malaikuruvi November 26, 2025 1 minute read
சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள்

சித்த, ஆயுள்வேத, யுனானி மருத்துவத்தை ஊக்குவிப்பது தொடர்பான பரிந்துரைகள் சிலவற்றை இலங்கையிலுள்ள சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் அரசுக்கு முன்வைத்துள்ளனர்.

கொழும்பில் சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் நேற்று (25) ஊடகசந்திப்பு நடத்தி இதுபற்றித் தெளிவுபடுத்தினார்கள்.

சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்களின் ஊடகசந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள்:

இலங்கையின் சித்த யுனானி ஆயுர்வேத மருத்துவர்கள். 25 மாவட்டங்களிலும் சுதேச மருத்துவத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்வது என்பது தொடர்பாக ஆயுர்வேத ஆணையாளர் ஜெனரல் மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரை இன்று அவர்களுடைய அலுவலகத்தில் சந்தித்திருந்தோம்.

பெண் சுதேச மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரிடம் கலந்துரையாடியதுடன் ஆயுள்வேத ஆணையாளர் அவர்களிடம் சுதேச வைத்தியசாலைகளில் குறைந்தளவு மருத்துவர்களே சேவையை வழங்குகின்றார்கள்; 23.3 மில்லியன் மக்கள் வாழும் நாட்டில் சொற்பளவு மருத்துவர்கள் தான் சேவையை வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலைத்தேய மருத்துவத்தினால் குணப்படுத்த முடியாத பல நோய்களை சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவத்தினால் குணப்படுத்த முடியும்.

எமது குறைபாடு எமது சேவையை மட்டுப்படுத்துதல்தான் என தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

கடந்த காலங்களில் வைத்தியப் பற்றாக் குறையின் காரணமாக சில வைத்தியசாலைகள் தமது சேவையினை மட்டுப்படுத்தியிருந்தமை, சிகிச்சைகள், மருந்துகள் மட்டுப்படுத்தப்பட்டமை ஆணையாளருக்கு எடுத்துக்காட்டப்பட்டது.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைசார் பிரச்சனைகளையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணமாக மூன்று பஸ் மாறி ; 40 மைல் தூரம் பிரயாணம் செய்து 65 வயதுள்ள ஒருவரால் வைத்தியம் பார்க்க வருவதில் பல இடர்பாடுகள் இருத்தல போன்ற யதார்த்தமான விடயங்களை ஆணையாளருக்குத் தெரிவித்திருந்தோம்.

ஆணையாளரும் இவ்விடயத்தை ஏற்றுக்கொண்டிருந்தார்.

தீர்வாக இலங்கையின் சனத்தொகைக்கேற்ப உட்சேர்த்தலை அதாவது , ஐந்தாயிரம் பொது மக்களுக்கு ஒரு வைத்தியரையும் பத்தாயிரம் பொது மக்களுக்கு ஒரு C.M.O வைத்தியரையும் நியமிக்க வேண்டும்.

2,587 ஆக அங்கீகரிக்கப்பட்ட ஆளனி இருக்கும் வரையில் எம் மருத்துவம் மாற்றம் காணாது. இத்தொகை 7000 ஆக உயர்த்தப்பட்டு சரியான முகாமைத்துவத் திட்டம் பிரயோகிக்கப்பட்டால் மட்டுமே பொது மக்களுக்கு சரியான சேவையினை வழங்கலாம் என கூறியதுடன் அக்டோபர் 9ம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளர் “புதிய ஆளனிகளை உருவாக்குதல் தற்பொழுது சாத்தியமில்லை” என குறிப்பிட்டதற்கிணங்க தற்போது பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் உட்பட அரச வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் சித்த ஆயுர்வேத யுனானி மருத்துவர்களுக்கு எதிர்காலமற்ற தன்மைமையை உருவாக்கும்

வலுவான கொள்கையொன்றை வகுக்கப்பட்டு சரியான தீர்வு எட்டப்படாதவரை 5 பீட மாணவர்தொகையை குறைத்து உள்ளீர்க்கக் கோரியிருந்தோம்

2024/07/29ம் திகதியன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்து மாணவர் தொகையை குறைத்து உள்வாங்க கோரிய போது நம் நாட்டுக்கு ஆயுர்வேத மருத்துவ தேவை மிக மிக அதிகமாக உள்ளது. ஆயுர்வேத திணைக்களத்திடம் சரியான திட்டமிடல் இல்லை.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு என்னென்ன விடயங்களை அபிவிருத்தி செய்ய எண்ணுகிறதோ அதை அவர்களுடனேயே கலந்துரையாடி சிக்கல்கள் ஏதும் இருப்பின் அதை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தெளிவாக எடுத்துக்கூறக் கேட்டிருந்தோம்

வெற்றிடமாக உள்ள ஆளணிகளை நிரப்புதல் சாதனை புரிய வழிவகுக்காது என்பதை ஆணையாளருக்கு வலியுறுத்தியதுடன, அரச சேவையிலுள்ள ஒரு வைத்தியரின் நுட்பம் கனிஸ்ட வைத்தியருக்குக் கடத்தப்பட வேண்டுமெனில் முறையான முகாமைத்துவ திட்டம் அவசியமென குறிப்பிட்டிருந்தோம்.

பல சுதேச அரச வைத்தியசாலைகளில் சாதனையான சிகிச்சைகளை வழங்கப்படுகின்றது.

நாம் வைத்தியசாலையுடன் நேரடியான தொடர்பில் இல்லை. இதனால், வைத்தியர்களின் திறமைகள் குறித்த வைத்தியருடன் மாத்திரமே மட்டுப்படுத்தப்படும். பல வருடங்களுக்கு பின்னர் நியமனம் பெறும்போது உண்மையான திறமை மறக்கப்பட்டுவிடும். இதனால் பாதிக்கப்படுவது மக்கள்தான் என குறிப்பிட்டிருந்தோம்.

முதியோர்சேவை, தொற்றா நோய், CP, Autism போன்ற நிலமைகளில் பல வெற்றிகளை சுதேச மருத்துவத் துறை பெற்றுள்ளது.

இவற்றை தேசிய கொள்கைகளாக பிரகடனப்படுத்துவது மக்களுக்கு நன்மை பயக்கும் என குறிப்பிட்டிருந்தோம்.

இலங்கையின் இறப்பு வீதத்தில் 78.4% தொற்றா நோய்களால் ஏற்படுகிறது. எமது மருத்துவ முறைமையை மேம்படுத்துவதன் மூலம் இவ் 74.8 % இறப்பு வீதத்தினை குறைக்கலாம் என குறிப்பிட்டிருந்தோம்.

இலங்கையின் படைவீரர்களுக்கு, குறிப்பாக Police, Army, Navy போன்ற வீரர்களுக்கு தொற்றா நோய்கள் ஏற்படும் வீதம் 30 – 40% வரையாக இருப்பதாக நாங்கள் அறியப் பெற்றிருந்தோம். எனவே அப்படியான நோய் நிலைமைகளை குறைக்க எமது மருத்துவம் பெரும் பங்கு வகிக்கிறது.

மலைநாட்டில் சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவ சேவைகள் ஏனைய இடங்களை போல் வழங்கப்படுவதில்லை. ஆகவே மலைநாட்டு மக்களுக்கும் சேவை பெறுதலை உறுதிப்படுத்தி விஸ்தரிக்க வேண்டும், சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு சித்த, ஆயுர்வேத, யுனானி மருத்துவம் பெரும் பங்கு வகிக்கும்.

இவ் மருத்துவ முறைகளை முறைவர பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் டொலர் செலவினங்களை குறைக்கலாம்.

தற்போது சிறுநீரகம் சார்ந்த பிரச்சறைகள் அதிகரித்து வருகிறன. ஆகவே மதவாச்சி சிறுநீரக ஆயுள்வேத வைத்தியசாலையை விரிவாக்கம் செய்யலாம்.

இம் மருத்துவ முறை போல இருதய நோய்களில்கூட பல சாதனையான சிகிச்சைகள் இடம்பெறுகின்றன. ஆகவே இது தொடர்பாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்

48 திட்டங்களை உள்ளடக்கிய திட்டமுன்மொழிவுகளை முதற்கட்டமாக வழங்கியதுடன் முதற்கட்டமாக நாங்கள் குறிப்பிட்ட விடயங்களை நடைமுறைப்டுத்தினாலே தற்போது எம் சமூகத்திலுள்ள பல நோய் நிலமைகளுக்கு தீர்வுகாணலாம்.

இவ்வாறு தீர்வுகாண்பதன் மூலம் எதிர்காலத்தில் வேலை இல்லை என்கிற பிரச்சனை வராது என குறிப்பிட்டதுடன் 2035ம் ஆண்டளவில் இலங்கையின் சுதேச மருத்துவத்தை உலகின் சிறந்த இடத்துக்குக் கொண்டுவர முடியும். அதற்குத் தேவையான பூரண ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றோம் என இன்று 2025/11/25 மகளிர் விவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகசந்திப்பை சித்த ஆயுள்வேத யுனானி மருத்துவர்கள் வழங்கியிருந்தார்கள்.

கௌசல்யா

Post navigation

Previous: கண்டி- நுவரெலியா பிரதான வீதி தற்காலிகமாக மூடல்!
Next: ஹப்புத்தளை பகுதியில் மண்சரிவு

Related Stories

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
WhatsApp Image 2026-03-01 at 19.36.18

சுவாமி கைலாசநந்த் கிரிஜி மகாராஜ்-ஜீவன் தொண்டமான் சந்திப்பு

Malaikuruvi March 1, 2026
மாணவர்களே! நீங்கள் நாளைய தலைவர்கள்

மாணவர்களே! நீங்கள் நாளைய தலைவர்கள்

Malaikuruvi February 28, 2026

Trending News

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார் 1

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல் 2

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும் 3

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு 4

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

March 2, 2026
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி! modi 5

வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!

March 1, 2026

Connect with Us

  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

You may have missed

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்

Malaikuruvi March 2, 2026
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்

Malaikuruvi March 2, 2026
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்

Malaikuruvi March 2, 2026
காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு

Malaikuruvi March 2, 2026

About Author

Categories

Business Entertainment Fashion Featured Health Lifestyle Newsbeat Sports Stories Technology Technology Travel Trends Uncategorized World ஆன்மிகம் ஆமா இது இப்படித்தாங்க இந்தியா இலங்கை உலகம் உள்ளூர் செய்திகள் கட்டுரைகள் கலை, இலக்கியம் சந்திக்கடை சிவராமு சினிமா செய்திகள் நம்மவூர் சமாச்சாரம் பிரதான செய்திகள் மண்ணின் மைந்தர்கள் லாழ்வியல் விசேட செய்தி விளம்பரம்

Recent Posts

  • ஈரான் விமானங்களை சுட்டு வீழ்த்தி போரில் களமிறங்கியது கட்டார்
  • இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
  • செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறையைக் கொண்டுவரும்
  • காவத்தையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பு
  • வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • VK
  • Youtube
  • Instagram

Copyright © All rights reserved

Copyright © All rights reserved. |