கொழும்பு செட்டியார் தெரு அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினால் ஆறாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ‘தன்சலை’ நிகழ்ச்சி நேற்று [30.05.2026] மாலை 6 மணியளவில் சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இதில்,கொழும்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஷாந்த டீ சொய்சா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்களான மகேஷ் குமாரசிங்கா, ஜெயந்த டீ சில்வா, புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பிரதான பொறுப்பதிகாரி ஜெயந்த டி சில்வா உட்பட அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கச் செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் தவக்குமார் உட்படப் பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தனர்.
ஆறாவது வருடமாக நடைபெற்ற இந்த ‘தன்சலை’ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர். நிறைவில் கலைந்துசென்றனர்!



