கொழும்பு-கண்டி ரயில் சேவை அடுத்த மாதம் ஆரம்பமாகிறது.
கொழும்பு கோட்டைக்கும் கண்டிக்கும் இடையிலான ரயில் சேவை அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரம்புக்கணை – கடுகண்ணாவை இடையிலான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அப்பாதையில் ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
