கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து அதி வேகமாகத் தலவாக்கலைக்கு வந்த ஓட்டோ வட்டவளையில் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரை அழைத்துவந்தபோது நேற்று (15) இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. படுகாயமடைந்த ஓட்டுநரும் ஓட்டோவும் மீட்கப்பட்டனர்!
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து இடம் பெற்றபோது, வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர் ஒருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
இந்த விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த சாரதி உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
