நுவரெலியாவிலிருந்து இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸொன்று எட்டியாந்தோட்டை தனகொலவத்தைப் பகுதியில் நேற்றிரவு (20) விபத்துக்குள்ளானதில் 40 வயது பெண்ணொருவர் கொல்லப்பட்டார்.
பஸ் விபத்துக்குள்ளானபோது வீதியில் சென்ற பெண்ணும் சிறுவர்கள் இருவரும் காயமடைந்தனர்.
பின்னர் காயமடைந்த பெண் உயிரிழந்தார். பஸ்ஸில் பயணித்த இந்தியப் பயணிகள் இருவரும் காயமடைந்து எட்டியாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
