உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கும் குறிப்பாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் தனது இதய பூர்வமான சித்திரைப் புத்தாண்டை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புத்தாண்டு என்பது புதிய தொடக்கங்களின் அடையாளமாகும். கடந்த காலத்தின் அனுபவங்களைப் பாடமாகக் கொண்டு, எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ளும் ஒரு சிறப்பான தருணமாகும். இவ்வருடம் நம் சமூகத்திற்கு அமைதி, ஒற்றுமை, முன்னேற்றம், வளம் நிறைந்ததாக அமைய வேண்டும் என நான் உளப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.
பெருந்தோட்ட மக்கள் எதிர்நோக்கும் சவால்களைத் தீர்க்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, அடிப்படை வசதிகள் போன்ற துறைகளில் மேலும் முன்னேற்றங்களை ஏற்படுத்துவது எங்கள் முக்கிய குறிக்கோளாகும்.
இந்தப் புத்தாண்டு அனைவருக்கும் ஆரோக்கியம், சந்தோஷம், செழிப்பு நிறைந்ததாக அமையட்டும். ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டால், நாம் இன்னும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்
