கண்டி -வத்தேகம அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் ஏழு மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து பன்விலை கோட்டத்தின் மற்றுமொரு வரலாற்று சாதனையைப் படைத்தனர்.
அவர்களுக்கானபாராட்டு விழா வித்தியாலயத்தின் அதிபர் சு.சிறிதரன் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் நேற்று (29) நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாக செலான் டுவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் தியாகராஜன் சத்தியசீலனும் சிறப்பு அதிதியாக பன்விலை மக்கள் வங்கியின் முகாமையாளர் விஜயகோனும் கலந்து கொண்டனர்.
விசேட அதிதியாக வத்தேகம கல்விப்பணி மனையின் ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஆலோசகர் திருமதி.P.விஜேஸ்வரி கலந்து சிறப்பித்தார்.
வகுப்பாசிரியை திருமதி மு. திலகநதி பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டதோடு சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டன.
சித்தியடைந்த மாணவர்களின் பெயர்கள்:
S.டிலுசான்(160) N.டிமேசன்(147) G.அபிலேஸ்வரி(149) V.தருவின்(147) T.தக்சனா(149) D.சிந்தனா(141) Y.ரிசானி(131)
பன்விலை நிருபர் ம. நவநீதன்












