கம்பளை, நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி மார்ச் 31 காலை 8.30 இற்குப் பாடசாலை அதிபர் எஸ். ரகு தலைமையில் நடைபெறுகிறது.
நாவலப்பிட்டி ஜெயதிலக விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்ள இந்த விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கம்பளை கல்வி வலயக் கல்விப் பணிமனையின் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான ஆர். விஜேந்திரன் கலந்துகொள்கிறார்.
கம்பளை கல்விப்பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் ஆர். பீ. சேவியர்,உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜி. கார்த்திக் ஆகியோரும் பல முக்கிய பிரமுகர்களும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொள்கிறார்கள் என்று விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் ஆசிரியர் எஸ். சத்தியசீலன் தெரிவித்தார்.
பன்விலை நிருபர் ம. நவநீதன்
