வடக்கு, கிழக்கில் மழையுடனான காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (14) காலை வெளியிட்டுள்ள காலநலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் கிழக்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக இந்த இரண்டு மாகாணங்களிலும் மழை நீடிக்கும் என்று திணைக்களம் கூறுகிறது.
வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா ஆகிய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடை மழை பெய்யும். ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.
