கேரம் பலகை வழக்குத் தொடர்பாகச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், அந்தத் தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதனால், பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்திருந்த பிணை மனுக்களைக் கொழும்பு நிரந்தர மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் நிராகரித்துள்ளது.
பிரியந்த லியனகே, விராஜ் வீரசூரிய மற்றும் பி.எம்.டி. பண்டார ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒரு பிரதிவாதி, மேன்முறையீட்டின் கீழ் பிணை கோரும்போது, விசேடமான காரணங்களை முன்வைப்பது அத்தியாவசியமானது.
ஆனால், இந்த இரண்டு பிரதிவாதிகளும் முன்வைத்த காரணங்கள் பிணை வழங்குவதற்குப் போதுமான விசேடமான காரணங்கள் அல்ல என்பதால், அவர்களது பிணை மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று நீதிபதிகள் குழாம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
